விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி கொலை வழக்கில், வழக்கை திசை திருப்பும் முயற்சியில் திமுக நிர்வாகி!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த 11-ம் தேதி 17 வயது சிறுமி அக்கிரமத்தின் அருகே உள்ள கருவேலங்காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், குற்றவாளியை கைது செய்யக்கோரி வேடநத்தம் கிராமம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று வரை நடைபெற்று வருகிறது. 


சிறுமி காணாமல் போன புகாரை அலட்சியப்படுத்தியதாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை  நெல்லை சரக்க டி.ஐ.ஜி சரவணன் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.



தற்போது வரை சிறுமியின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் உள்ளனர்.


குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் 10 தனி படைகள் அமைத்து,10 தனிப் படைகளும் இரவு பகலாக அயராது உழைத்து வருகின்றனர்.

இதுவரை அச்சிறுமியின் உடன் பயின்ற மாணவ,மாணவிகள் இருந்து அக்கிரமத்தை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அக்கிரமத்தை சேர்ந்த 5 நபர்களிடம்  டி.என்.ஏ பரிசோதனையும் செய்யப்பட்டு இன்னும் முழு அறிக்கை வரவில்லை,இதுவரை எந்த குற்றவாளியும் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.




இந்தநிலையில் இந்த சிறுமி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற  மதுரை அமர்வில் அதிமுக சார்பில் தொடர்ந்த வழக்கில் 16-ம் தேதி நேற்று மதுரை அமர்வில் காவல்துறையினர் தெரிவித்ததாவது, சிறுமி கொலை வழக்கில் குற்ற வழக்கில் சிறுமிக்கு நன்கு  தெரிந்தவர்களே கொலை குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அதேபோன்று சிறுமியின் பெற்றோர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், சம்பவ இடத்தில் செயல்பாட்டில் இருந்த சுமார் 1600 செல்போன் எண்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை வழக்கில் விசாரணைக்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் கடந்த 10- ம் தேதியிலிருந்து தற்போது வரை கிராமத்தில் உள்ள திமுக நிர்வாகி ஒருவர் காவல்துறையினரையும், பத்திரிக்கையாளர்களையும் குடும்பத்தாரிடம் நெருங்க விடாமல் தற்போது வரை இடையூறு செய்து வருகிறார்.


அந்த சிறுமி கொலை வழக்கில் அந்த திமுக பிரமுகரையும் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஒரு நபரையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்று அக்கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.