5000 தொண்டர்களுடன் புடைசூழ ஆர்ப்பரித்து வந்த விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேன்!
2026 சட்டமன்றத் தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக போட்டியிட தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயனுக்கு மீண்டும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாய்ப்பு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் இருந்து வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனுக்கு எட்டையாபுரம் தேசிய நெடுஞ்சாலை விளாத்திகுளம் சந்திப்பில் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து தொண்டர்கள் “ புடைசூழ ” செண்டை மேளம் முழக்கத்தோடு ஆர்ப்பரித்து வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனை, திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விடுதலை, சிறுத்தைகட்சி,மதிமுக,தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளை சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் நகர் பகுதியில் பிரச்சார வாகனத்தில் பலம் வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.