பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேன்!
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியான பசுவந்தனையில் அமைந்துள்ள கைலாசநாதர் சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து, பசுவந்தனை பஜார் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத்தொடர்ந்து குளத்தூரில் கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் குளத்தூர் பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகள் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ்,வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் சண்முக ஆனந்த் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.