வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்தி  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  எட்டயபுரம் பகுதியில் மார்க்கண்டேயன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.எட்டயபுரத்தில் எட்டிஸ்வரர்மூர்த்தி திருக்கோவில், பெருமாள் கோவில் மற்றும்  சீறப்புராணம் இயற்றி அமுதகவி உமறுபுலவர் நினைவு மண்டபத்தில் வழிபாடு நடத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எட்டையாபுரம் நகரில் உள்ள வணிகர்கள். முக்கிய பிரமுகர்களை சந்தித்தும் வாக்கு சேகரித்தார்.