கோவில்பட்டி அருகே விமானி பயிற்சி நிலையம் அமைக்க தனியாருக்கு, 'டிட்கோ' நிறுவனம் அழைப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தில் உள்ள தோணுகால் கிராமம், மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கிலோமீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட ஓர் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. இந்த ஓடுதளம், கோவைச் சேர்ந்த லட்சுமி ஆலை நிர்வாகத்தினர் தங்களது செஸ்னா வகை சிறிய ரக விமானத்தை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், சிலர் இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.கோவில்பட்டி விமான பயிற்சி மையம் 63 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஓடுதளம் நாலாட்டின்புதூர் மற்றும் தோணுகால் ஆகிய இரு கிராமங்களை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது 1998ஆம் ஆண்டு வரை செயல்பட்டபின் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு கோவில்பட்டியில் விரைவில் விமான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.இதையடுத்து தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொ டிட்கோ' நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மற்றும் ஆப்ரேட்டரை தேர்வு செய்ய டெண்டர் அறிவிப்பு செய்தது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து எடுத்து அளவீடு செய்து குறித்து சென்றனர். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் விமானி பயிற்சி நிலையம் அமைக்க தனியாருக்கு, 'டிட்கோ' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக, 31 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படும் இடத்தில் தனியார் நிறுவனம், தன் செலவில் பயிற்சி நிலையத்தை அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதை அமைக்கும் நிறுவனம் ஈட்டும் வருவாயில், ஒரு பங்கை, டிட்கோவுக்கு தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.