விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்பங்களின் நிலை தொடர்பு குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் மகளிர் உரிமைத் தொகை குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு வருவாய்த்துறை அலுவலர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த மகளிர்களிடம் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் .செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் திருமதி.மல்லிகா ஆகியோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை?
அடுத்த
எதிர்க்கட்சிகள் முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள்- அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி?
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026