கோவில்பட்டி அருகே மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!
மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.குப்பனாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, காலை உணவு திட்ட ஊழியர்களிடம் உணவுகள் சரியான முறையில் வருகிறதா, உணவுகள் தரம் குறித்து ஆய்வு செய்து சரியான முறையில் மாணவ மாணவியர்களுக்கு பரிமாறப்படுகிறதா என கேட்டறிந்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மாணவர்களுக்கு படத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைத்தார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் மல்லிகா,கயத்தார் வட்டாட்சியர் திரு.சுந்தரராகவன், கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.