கோவில்பட்டி அருகே கார் விபத்தில் தினபூமி பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழப்பு!
மதுரை பகுதியை சேர்ந்த தினபூமி பத்திரிக்கை உரிமையாளர் மணிமாறன் (70),இவர் நாகர்கோவில் தோவாளையில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார், காரை அவரது மகன் ரமேஷ் ஓட்டி வந்துள்ளார், இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் சாலையின் சென்ட்டர் மீடியனின் மோதி எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார், படுகாயம் அடைந்த ரமேஷை 108 வாகனம் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின் புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.