"மதுக்கடைகளை நடத்துவதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றாரா?" - விளாத்திகுளத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகி கேள்வி!
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில், கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பத்மபூஷன் விருது கெளரவிக்கும் விழாக்களை கொண்டாடும் விதமாக கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் முப்பெரும் விழா கொண்டாட்டங்கள் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மாபெரும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக சமூக வலைத்தள அணை துணைச் செயலாளர் தமிழரசன் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் சிறப்புரையாற்றிய போது; ஆளுங்கட்சியான திமுக அரசையும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விமர்சனம் செய்து, "மதுக்கடைகளை நடத்துவதற்காகத்தான் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றாரா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு முன்னதாக மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுக்கூட்டத்தை தொடங்கினர். மேலும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தயாளலிங்கம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி உட்பட ஏராளமான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.