விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு உடம்பில் மஞ்சள் மற்றும் சேற்றைப் பூசிக்கொண்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் - கந்தசாமிபுரம் கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலின்  வைகாசி திருவிழாவானது கொடியேற்றத்துடன் துவங்கி கடந்த 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான இன்று இக்கோவிலின் விசேஷ திருவிழாவான சேற்றுத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள்  உடம்பில் மஞ்சள் மற்றும் சேற்றைப் பூசிக் கொண்டு, கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு ஊரிலுள்ள பொது கண்மாயில் இறங்கி தங்கள் உடல் முழுவதும் சேற்றை பூசி  இருந்து தொடங்கி கிராமம் முழுவதும் சுற்றி இறுதியில் கோவிலை வந்தடைந்து இந்த விசேஷ வழிபாட்டினை மஞ்சள் நீர் விளையாட்டுடன் முடித்தனர். பின்னர் கிராம பெண்கள் தலையில் தலையில் வைத்து  கொண்டுவரப்பட்ட வேப்ப இலை மற்றும்  மஞ்சள் நீரை  காளியம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தபின்  சிறப்பு தீபகாரனை  நடைபெற்றது. மேலும் இத்திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். "சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் அந்த மண்ணில் உள்ள நுண் சத்துக்கள் நம் உடலுக்கும் கிடைக்கும் என்பதும் சேர்த்து திருவிழா ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.