விளாத்திகுளத்தில் தேவேந்திர குலவேளாளர் நலச்சங்கம் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக போராடிய சமூக நீதிப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்தநாள் விழாவை தமிழகத்தின் உள்ள பல்வேறு அரசியலமைப்பினர் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம் சார்பில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பாப்பா பாண்டியன் வணிக வளாகத்தில் அமைந்துள்ள தேவேந்திர வேளாளர் நல சங்க அலுவலகத்தில் வைத்து, தியாகி இம்மானுவேல் சேகரன் 100 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.