கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ: அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகள் கரம்பை மண் கொண்டு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 4.79 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கந்தசாமிபுரம் கிராம மக்கள் அடிக்கல் நாட்டு பணிக்கு வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனிடம் தங்கள் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட உள்பகுதியில் பேஸ்மட்டத்திற்கு சரல் மண் அடிப்பதற்கு பதிலாக கம்மாய் கரம்பை மண்களை அடித்து தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கருதாமல் அங்கன்வாடி மையத்தை தரமாக கட்டுவதில்லை என்று ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கந்தசாமிபுரம் கிராம மக்கள் மழையில் நனைந்தவாறு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரிடம் குற்றம் சாட்டினர்.
பின்னர் ஒப்பந்ததாரர் வினோத்னிடம் கட்டுமான பணிகளை முறையாகவும் தரமாகவும் செய்ய வேண்டும் என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கந்தசாமிபுரம் மற்றும் சேர்வைகாரன்பட்டி பகுதியில் மழையையும் பொறுப்பெடுத்தாமல் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வீதி வீதியாக சென்று கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் மற்றும் கழிவுநீர் வருகால்களை ஆய்வு செய்தார்.நிகழ்வில் புதூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயமித்ரா,ஸ்ரீனிவாச பெருமாள், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,கிளைச் செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.