எட்டையாபுரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய பேரூராட்சித்தலைவி!
தமிழகத்துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சரும்,திமுக இளைஞர் அணி செயலாளராகவும் உள்ள உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரால் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்தநாள் விழாவை பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூராட்சி பகுதி தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி அன்னதானம் வழங்கி கொண்டாடி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்வில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் எட்டயபுரம் பகுதி திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.