விளாத்திகுளம் அருகே அதிக மது அருந்தி இளைஞர் உயிரிழப்பு?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் கார்த்திபன்(35), இவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மேட்டுப்பட்டி காட்டுப்பகுதியில் கார்த்திபன் சடலமாக கிடந்துள்ளார், அவர் அருகே மது பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், கார்த்திபன் உடலை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.