விளாத்திகுளம் அருகே ஆபத்தான முறையில் இருக்கும் மின்கம்பம்: ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு அலைக்கழிப்பு செய்யும் மின்வாரியத்துறை!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லட்சுமி அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனிப்பட்ட நபர் இடத்திற்கு மின்கம்பம் நட்டி அதிலிருந்து ஆபத்தான முறையில் மின்வயர்கள் செல்கின்றது, இந்த மின்கம்பத்தை அகற்றுக்கோரி லட்சுமி அழகர்சாமி  குடும்பத்தினர் புதூர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வந்த மின்வாரிய அதிகாரிகள் 1972-ம் ஆண்டுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களை அகற்ற முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து லட்சுமி அழகர்சாமி குடும்பத்தினர் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தனர், புகாரின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர், ஆய்வின் முடிவில் இந்த இடத்திற்கான வருவாய்த்துறை ஆவணத்தை சம்பாபிக்குமாறு கூறியிருந்தனர், இதனை அடுத்து வருவாய்த்துறையினரிடம் நில அளவீடு செய்து வருவாய்த் துறையினர் இது பொதுப்பாதை அல்ல என்று சான்றிதழ் அளித்தனர், அந்த சான்றிதழை சரிபார்த்த மின்வாரியத் துறையினர், பத்திரப்பதிவு துறை ஆவணத்தை கூறியுள்ளனர், இதனை அடுத்து லட்சுமிஅழகர்சாமி குடும்பத்தினர் பத்திரப்பதிவுத்துறை ஆவணத்தையும் வழங்கினர், அப்படி வழங்கியும் அந்த மின்கம்பத்தை அகற்றாமல் தனிநபருக்கு சாதகமாக நடந்து கொண்டு லட்சுமி அழகர்சாமி குடும்பத்தினரை மின்வாரியத் துறையினர் அலைக்கழிப்பு செய்வதாக லட்சுமி அழகர்சாமி குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் வரை சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று லட்சுமி அழகர்சாமி வேதனை தெரிவித்துள்ளார். எனவே ஆபத்தான முறையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு லட்சுமி அழகர்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த மின்கம்பம்  பிரச்சனை  சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்...