விளாத்திகுளம் அருகே மின்சாரத்துறை அலட்சியத்தால் மின்சாரம் பாய்ந்து மாடு பலி?


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தெற்குபனையூர் கிராமத்தைச் சேர்ந்த புலமாடன்(52), இவர் விவசாய மற்றும் 15 எருமை மாடுகளை வைத்து கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறார், 

இந்நிலையில் பனையூர் கிழக்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச்சென்றபோது, அருந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியில் மிதித்த எருமை மாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது, இதுகுறித்து கால்நடை மருத்துவர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர்.

தற்போது விவசாய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, கால்நடை உயிர் இழப்பு ஏற்பட்டது போல்,மனித உயிருக்கு இழப்பு ஏற்படாத வகையில், மின்சாரத்துறை மெத்தனப் போக்கு இல்லாமலும் அஜாக்கிரதையாக செயல்படாமலும்,   போர்க்கால அடிப்படையில் மழையினால் பாதிக்கப்பட்ட மின் பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.