மகாகவி பாரதியார் குறித்து சர்ச்சை பேச்சு - யூ டிப்பர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி எட்டையாபுரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
திராவிட விடுதலைக் கழகம் சார்பில் மேட்டூர் அணை-1 பகுதியில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பதவி விலகக் கோரி கடந்த 13ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் யூ டிப்பர் மைனர் விஜய் (U2 BRUTUS) என்பவர் பேசுகையில் மகாகவி பாரதியார் குறித்தும், அவரை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது .இந்நிலையில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் பாரதியார் மணிமண்டபம் முன்பு யூ டிப்பர் மைனர் விஜயை (U2 BRUTUS) கைது செய்ய வலியுறுத்தி, பாஜக மண்டல் தலைவர் சரவணகுமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பி,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஆத்திராஜ்,ஒன்றிய தலைவர் சரவணகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணி அமைப்பாளர் ஜெயகண்ணன், நெசவாளர் அணி அமைப்பாளர் நாகராஜ்,மாநில மகளிர் அணி பொறுப்பாளர் லீலாவதி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் பொதுமக்கள், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.