விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த மின் ஊழியர்பலி.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்த கிராம் புளி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் குருநாதன் வயது (28) இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார், இந்நிலையில் இன்று காலை படர்ந்தபுளி தெரு விளக்கு மாற்ற சென்றபோது மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார், இதனையடுத்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குருநாதன் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,இறந்த குருநாதனுக்கு திருமணம் ஆகி கோட்டைச்செல்வி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Vilathikulam
மின்சாரம் தாக்கி ஒப்பந்த மின் ஊழியர்பலி..
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026