வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து விளாத்திகுளம் MLA தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்!
மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தான ஆலோசனை கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார்கள்.கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மணல் மூடைகள் JCB இயந்திரங்கள்,108- வாகனங்கள் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திடவும், முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தினார். மேலும் கிராமத்தில் பணி புரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள் பேரிடர் காலங்களில் பணி செய்யும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு கூறினார்கள். மேலும் குளங்களில் உள்ள மதங்களை ஆய்வு செய்வதற்கும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் துணை ஆட்சியர் சிப்காட் தூத்துக்குடி சார்ஆட்சியர் (பொறுப்பு) கோவில்பட்டி செந்தில்வேல்முருகன் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன்,தினகரன் விளாத்திகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல்,விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உதவி செயற்பொறியாளர் விநியோகம் விளாத்திகுளம் செந்தில்குமார் உதவி செயற்பொறியாளர் வைப்பார் வடிநில உபகோட்டம் (விளாத்திகுளம்) முருகன் கோவில்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் உமாசெல்வி உதவி பொறியாளர் விநியோகம் விளாத்திகுளம் செல்வகுமார் உதவி பொறியாளர் விநியோகம் நாகலாபுரம் சுரதா துணை மின்நிலையம் உதவி பொறியாளர் டெனிளா உதவி கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை க(ம)ப எட்டையாபுரம் கணேஷ்குமார் வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் வட்டார சுகாதார ஆய்வாளர் கற்பகம் வட்ட வழங்கல் அலுவலர் செல்வலட்சுமி விளாத்திகுளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளார் அன்புராஜன் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.