கனவு இல்லம் திட்ட பணிகளை மேற்கொள்ளுவது குறித்து கூடுதல் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  கே.சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 2025-2026 (மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள்) 110- பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுவது குறித்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.