ஓய்வூதியம்,கட்டுமான தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி_ எட்டையபுரம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பாக கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் (AITUC) இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை எட்டயபுரம் சாத்தான்குளத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர் எட்டயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் தொடங்கி வைத்து தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கிட கோரியும் , கட்டுமான மானிய தொகையை உயர்த்தி வழங்கிட கோரியும், கல்விச் செலவை முழுவதையும் கட்டுமான சங்கங்கள் மூலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.