விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள K.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவரின் மகன் முத்துராஜ் (49), கட்டிடத் தொழிலாளியான இவர் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் பகுதியில் கட்டிட வேலையை முடித்துவிட்டு 25-02-2026 இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அரியநாயகிபுரம் to  விளாத்திகுளம் இடையே  நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இதனை அடுத்து முத்துராஜின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.