விளாத்திகுளத்தில் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்..!


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்கும் "சங்கதன் ஶ்ரீதன் அபியான்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்கும் நிகழ்வு மற்றும் கட்சியினரிடையே கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் A.P.C.V.சண்முகம் தலைமை தாங்கினர். இதில் கர்நாடக மாநில முன்னாள் எம்.எல்.சி. விஜய் தரம் சிங், முன்னாள் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசந்திரன், தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கலந்துரையாடி, மாவட்டத் தலைவரை நியமிப்பது குறித்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.

மேலும், இந்த கலந்தாய்வு மற்றும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் தமிழநாடு ஐ.என்.டி.யு.சி. அமைப்பு செயலாளர் ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், பிரேம்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சே.ஜாண் பிரிட்டோ, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அ.யோகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.