விளாத்திகுளம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் - சிலுவைபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி என்பவரின் மகள் அனிதா(19),இவர் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இவருக்கும் அவரது தாயார் பிச்சம்மாளுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அனிதா 2 நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது .
இந்நிலையில், பிச்சம்மாள் தனது இன்னொரு மகளுடன் விளாத்திகுளத்துக்கு சென்று 08-02-2025 இரவு 9 மணி அளவில் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் மின் விசிறியில் அனிதா சேலைகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டே கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குசென்று அனிதாவின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.