விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவி - அரசு பொதுத் தேர்வில் 378 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குறளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகள் முத்துக்கெளசல்யா (17) .விளாத்திகுளத்தில் உள்ள கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் நினைவு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்த முத்துக்கெளசல்யா அரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இதற்கிடையில் கடந்த மாதம் 21ந்தேதி மழை பெய்த போது தனது மிளகாய் பழங்கள் மழையில் நனைந்து விடாமல் இருப்பதற்காக தார்ப்பாய் கொண்டு மூடுவதற்காக முத்துக்கௌசல்யா சென்ற போது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் முத்துக்கெளசல்யா 378 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்
தமிழ் - 95
ஆங்கிலம் - 42
இயற்பியல் - 50
வேதியியல் - 64
தாவரவியல் - 60
விலங்கியல் - 67
நர்சிங் படிக்க வேண்டும் என்று முத்துக் கெளசல்யா ஆசையில் இருந்ததாகவும், ஆனால் மின்னல் தாக்கிய உயிரிழந்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.