மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மரியாதை செலுத்திய நகரச் செயலாளர் ராஜகுமார்!
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று அரசு மற்றும் பலதரப்பு மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் கட்சியினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சார்பில் பாரதியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் பாரதியார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள பாரதியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.