விளாத்திகுளம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் : மூன்று பேர் கைது!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் நாகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சரக்கு வாகனத்திற்கு முன்பு   இருசக்கர வாகனம் வந்தது அறிந்த சங்கரலிங்கபுரம் போலீசார் சந்தேகம் அடைந்து வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த முயன்ற போது, அந்த வாகனத்தில் மூன்று நபர்கள் காவல்துறையினரிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறு செய்துள்ளனர், இதனை அடுத்து அந்த சரக்கு வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் அதில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 130 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது, இதனை அடுத்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் புகையிலைப் பொருட்கள் கடத்தலில்  ஈடுபட்ட என்.வேடம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் கார்த்திக்குமார் (33), தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் வெங்கடேஷ் (25), ஆற்றங்கரை - தானியேல் நகர் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் அன்புதாசன்(25) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



ஏற்கனவே கார்த்திக் மீது மாசார்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு வழக்கும், வெங்கடேஷ் மீது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.