விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை  பிரதோஷ வழிபாடு முன்னிட்டு, நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன் சந்தானம்,பன்னீர், இளநீர்,விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து, ரோஜா,மல்லிகை,செவ்வரளி, அருகம்புல், வில்வஇலை, ஆவாரம்பூ உள்ளிட்டவைகளை கொண்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாதாரணை நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.