விளாத்திகுளத்தில், கோலாகலமாக கொண்டாடப்பட்ட குழந்தைகள் தின விழா : 300க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்பு..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் ஆபத்து நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பன பற்றி விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நடனப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை, நாடகம், ஓவியம் மற்றும் பாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கி சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளாத்திகுளம் தொன்போஸ்கோ இல்லத்தந்தை ஜெயன் ஜோசப், முன்னாள் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஞானப்பிரகாசம், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர் சாம் சத்யராஜ் உட்பட சமூக ஆர்வலர்கள் குழந்தைகளுக்கு குழந்தை பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து விளக்கிக்கூறியதோடு மட்டுமின்றி, கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் வள மையத்தைச் சேர்ந்த 300க்கும் அதிகமான குழந்தைகள், மைய ஒருங்கிணைப்பாளர்கள், வேம்பு மக்கள் சக்தி இயக்க தன்னால தொண்டு நிறுவனப் பணியாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டு குழந்தைகள் தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்..