முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாநில அளவிலான மின்னொளி கபடி : விளாத்திகுளம் & அந்தியூர் அணியினர் முதலிடம்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழாவானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பாக விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தலைமையில் மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி தனியார் பள்ளி மைதானத்தில் நேற்றைய தினம் துவங்கியது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கபடி அணியினர் கொண்டனர். இப்போட்டியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை தொடங்கி வைத்தனர். நேற்று மற்றும் இன்று என 2 நாட்களாக நடைபெற்று வந்த இந்த மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் அந்தியூர் - ஒட்டன்சத்திரம் அணிகள் மோதிக்கொண்டனர். இதில் அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணியினர் 18-17 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் பரிசை வென்றனர். அதே போன்று ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் - தூத்துக்குடி அணியினர் மோதிக்கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அணியினர் 35-9 என்ற புள்ளிகள் கணக்கில் விளாத்திகுளம் GVM கிளப் அணியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர். இதைத்தொடர்ந்து இந்த மாபெரும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பரிசுத்தொகை மற்றும் பரிசுக்கோப்பையை வழங்கினார். மேலும் விளாத்திகுளத்தில் 2 நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மைதானத்தைச் சுற்றிலும் கூடியிருந்து கண்டுகளித்தன
ர்.