எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது கார் மோதல் - விவசாயி உயிரிழப்பு - சிறுமி உள்பட 3 பேர் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருசாமி(45). விவசாயியான இவர் இன்று
அப்பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் விவசாயப் பணிகளுக்காக உரத்தை எடுத்துக்கொண்டு நேற்று டிராக்டரில் சென்றுள்ளார். டிராக்டரை அதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி(36) ஓட்டி சென்றுள்ளார்.
தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் டிராக்டர் மீது மோதியதில் அருகில் இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்து விபத்துக்குள்ளானது. இதில் விவசாயி குருசாமி , டிராக்டர் டிரைவர் பொன்னுச்சாமி மற்றும் காரை ஓட்டி வந்த வடக்கு கைலாசபுரத்தைச் சேர்ந்த பகவத், அவரது 13 வயது மகள் வர்ஷினி ஆகியோர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குருசாமி பரிதாபமாக இறந்தார் மேலும் இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இறந்த குருசாமிக்கு திருமணம் ஆகி சந்தியா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர்.
விபத்து குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.