விளாத்திகுளம் அருகே எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்த பேருந்தை “காணவில்லை” என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போக்குவரத்து அரசு பணிமனையில் இருந்து வேடப்பட்டி வரை வந்து செல்லும் பேருந்தை,கடந்த 2023 மார்ச் 6-ம் தேதி விளாத்திகுளம் அருகே உள்ள வேடப்பட்டி, புதுப்பட்டி வழியாக நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகள்,செல்ல ஏதுவாகவும் நாகலாபுரம் பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி செல்வதற்காகவும், கோவில்பட்டியில் இருந்து N.வேடப்பட்டி கிராமத்திற்கு வந்து செல்லும் பேருந்தை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் N. வேடப்பட்டி கிராமத்திலிருந்து நாகலாபுரம் வரை நீட்டிப்பு செய்து பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்த பேருந்து சில நாட்கள் மட்டுமே நாகலாபுரம் வந்த நிலையில் தற்போது அந்த பேருந்து “காணவில்லை” என்று நாகலாபுரம் பகுதி மக்கள் கூறுகின்றனர், புதிய வழித்தட பேருந்தை பச்சைகொடிகாட்டி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் MLA மார்கண்டயேன் அந்தப்பேருந்து முறையாக இயக்கப்படுதா என்பதை ஆய்வு செய்து, மீண்டும் கோவில்பட்டியில் இருந்து N. வேடப்பட்டி கிராமம் வழியாக நாகலாபுரத்திற்கு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நாகலாபுரம் பகுதி பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.