விளாத்திகுளத்தில் சித்திரை 9ம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 9ம் நாள் திருவிழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அறக்கட்டளை மற்றும் காவடிசிந்து கவியரசர் அண்ணாமலை ரெட்டியாரின் அறக்கட்டளை சார்பாகவும் ஒன்பதாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் பந்தயத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 12 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியானது விளாத்திகுளம் மதுரை சாலையில் இருந்து அயன்பொம்மையாபுரம் வரை 10 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது.


போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்கப் பணம் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.


அதேபோல் நாளை காலை சின்னமாடு தேன்ஞ்சிட்டு போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.