14 ஆடுகளை விஷம் வைத்துக்கொன்ற கொடூர கொலைகாரன் கைது : ரூ.2.50 இலட்சம் மதிப்பிலான ஆடுகளை இழந்த உரிமையாளர் சோகம்!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் உமையகுஞ்சரம்(55) என்பவர் கடந்த சில மாதங்களாக கே.குமாரபுரம் கிராமத்தில் ஆட்டுக்கிடை அமைத்து 120 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (02.09.2023) மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சாப்பிடச்சென்றுள்ளார். அப்போது ஆடுகள் ஒவ்வொன்றாக வாயில் நுரைதள்ளி மடிந்து விழுவதைக்கண்டு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது ஆடுகள் அரிசி சாப்பிட்டருப்பதைப் பார்த்து.... "வயல்காட்டில் எங்கிருந்து அரசி வந்தது..." என்ற சந்தேகத்துடன் சென்று பார்த்த போது இவர் அமைத்திருந்த ஆட்டுக்கிடைக்கு அருகில் இருக்கும் வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் செந்தில்குமார்(38) விவசாய நிலத்தில் இறந்து கிடந்த ஆட்டின் அருகில் ஒரு பையில் அரிசியுடன் யூரியா உப்பை கலந்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 1 செம்மறியாடு மற்றும் 13 வெள்ளாடுகள் என 14 ஆடுகள் அடுத்தடுத்து உரிமையாளரின் கண்முன்னே மடிந்து உயிரிழந்த நிலையில் உடனடியாக மற்ற ஆடுகளை அரிசியை சாப்பிடவிடாமல் உமையகுஞ்சரம் பாதுகாப்பாக கிடையில் அடைத்து விட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் விளாத்திகுளம் போலீசார் நடத்திய விசாரணையில், அரிசியில் யூரியா உப்பை கலந்து ஆடுகளை கொன்றது வள்ளிநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்துள்ளது. 14 ஆடுகளை மனிதாபிமானமின்றி விஷம் வைத்துக் கொன்ற கொடூர கொலைகாரனான செந்தில்குமாரை  விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் ஆட்டுக்கிடையில் மாய்ந்து கிடந்த 14 ஆடுகளையும் கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்து ஆடுகளின் உள் உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செந்தில்குமார் இடம் போலீசார் நடத்தி விசாரணையில், தனது நிலத்தில் ஆடுகள் தொடர்ந்து மேய்ந்து வந்ததால் இவ்வாறு செய்தேன் என வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் செந்தில்குமாரின் நிலத்தில் துவரை பயிரிடப்பட்டு ஏற்கனவே அறுவடை முடிந்து விட்டது என்பதை நிதர்சனம்..... 14 ஆடுகளை இரக்கமின்றி கொலை செய்துவிட்டு அதற்கு செந்தில்குமார் தெரிவித்த காரணம்தான் அனைவரையும் எரிச்சலூட்டும் விதமாகவும், கோபமடையச்செய்வதாகவும் அமைகிறது என்று புலம்புகிறார் ஆட்டின் உரிமையாளர் உமையகுஞ்சரம். அதுமட்டுமின்றி, ஆடுகளை கொள்வதற்கு அரசியல் விஷம் வைத்திருந்த கொடூரனுக்கு காவல்துறையினர் தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும், இல்லையென்றால் தான் மிகவும் வருத்தப்படுவேன் என்று கூறியது மட்டுமின்றி.... "என் குடியை கெடுத்துட்டான்...என்னால் என்ன முடியுமோ அதை செய்வேன்" என்று கனத்த குரலில் கண்ணீர் மல்க தெரிவித்தார். ரூ.2.50 இலட்சம் மதிப்புள்ள ஆடுகளை இழந்த உரிமையாளர் உமையகுஞ்சரம்.14 ஆடுகளை கொலை செய்த செந்தில்குமார்தான் இரக்கமற்றவர் என்றால், அவருடைய தந்தையான ஆறுமுகம் கடந்த 2022-ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டிலிருந்த ஆடுகளுக்கு இதே போன்று விஷம் வைத்து நான்கு ஆடுகளை கொன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் மனிதாபிமானம் இன்றி ஆடுகளை விஷம் வைத்துக் கொன்ற செந்தில்குமாரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 429, 294(b), 506(ii) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் செந்தில்குமாரை சிறையில் அடைத்தனர்.ஆடுகளுக்கு அரசியில் யூரியா கலந்து வைத்து வேண்டுமென்றே இரக்கமின்றி கொலை செய்த இச்சம்பவம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பேசும் பொருளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.