தம்பி விஜய் தொடங்கி உள்ளது வெற்றி கழகம் அல்ல வெற்றுக் கழகம்!



மெர்சல் பட பிரச்சனைக்கு இரவோடு இரவாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்பட்டது!



வாழ்நாள் முழுக்க நன்றி கடனாக இருப்பேன் என்று கூறியவர்  இன்று அதிமுக பெயரை சொல்லவே பயப்படுகிறார்.



தம்பி விஜய்க்கு அரசியல் வேண்டாம் -மீண்டும் நடிக்க வாங்க உங்கள் படத்திற்கு எவ்வித பிரச்சனை இல்லமால் பார்த்துக் கொள்கிறோம். அடுத்து அதிமுக தான் ஆட்சிக்கு வருகிறது விளாத்திகுளத்தில் முன்னாள் அமைச்சர்  கடம்பூர் செ. ராஜூ பேச்சு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த  பிரவீன் குமார் என்பவர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர்  முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர். செ. ராஜூ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.


அப்போது முன்னாள் கடம்பூர் செ. ராஜீ பேசுகையில் 


2026 தேர்தல் களம் வெற்றி அதிமுக நோக்கி இருக்கிறது. 



V for  விக்டரி  என்பது அதிமுகவிற்கு தான் பொருந்தும் 


 த. வெ. கவில் இருந்து பிரிந்து தமிழகத்தின் நலன் கருதி அதிமுகவில் இணைந்துள்ளீர்கள்



மழைக்காலத்தில்  தோற்றும் வானவில் அழாக தெரியும்.. சூரிய ஒளிபட்டு கண்ணுக்கு  தெரியமால் போய்விடும்.. வரும் தேர்தலில் வானவில்லும், சூரியனும் போய் விடும் 



வந்த வேகத்தில் மறையும் வானவில் போல் தான்  தமிழக வெற்றிக்கழகம் மறையும்


அதற்கு விளாத்திகுளம் இன்று பிள்ளையார் சூழி போட்டுள்ளது 



இங்குள்ள இளைஞர்கள்  பேசியதை பார்க்கும் போது மலரும் நினைவுகள் வந்தது. 



திமுக என்றைக்கும் தீய சக்தி தான். அவர்கள் செய்த ஒரே ஒரு புண்ணியம் எம். ஜீ. ஆரை.



விஜய், ரஜினி, அஜித் படத்தை நாங்களும் பார்ப்போம். மக்களும் பார்த்து ரசிப்பார்கள், விஜயின் அரசியலை இல்லை என்பதை   அவர் புரிந்து கொள்ள வேண்டும்



எம். ஜீ. ஆருக்கு நிகர் எம். ஜீ. ஆர் தான்



எம். ஜீ. ஆர் - விஜய் படங்களை வேறுபடுத்தி பாருங்கள்



எம். ஜீ. ஆர் தனது திரைப்படத்தில் மது, புகைப்பிடித்தால்  காட்சிகளை தவிர்த்து இளைஞர்களை நல்வழிப்படுத்தினார்.



மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம்  தடையின்மை சான்றிதழ் கிடைக்கமால் ஜனநாயகன் திரைப்படம் இன்று முடங்கி இருப்பது போல் முடக்கும் நிலை இருந்தது.



தம்பி விஜய் என் மூலமாக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். ( அந்த சந்திப்பு புகைப்படத்தை தனது செல்போன் மூலமாக காண்பித்தார்)



அன்று ஞாயிற்றுக்கிழமை.. அதே போல் தான் இன்றும் ஞாயிற்றுக்கிழமை 



விஜய் தொடங்கி உள்ளது வெற்றிக் கழகம் இல்லை வெற்றுக் கழகம் - அதிமுக தான் வெற்றிக்கழகம்


3 மணி நேரம் காத்து இருந்து அன்று இரவோடு இரவாக அந்த திரைப்படத்திற்கு தேவையான சான்றிதழ் வாங்கி கொடுத்து மெர்சல் திரைப்படத்தை  வெளியிட வைத்தோம் 



அன்று விஜய் என்றும் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன்பட்டு இருப்போன் என்று கூறினார். அதை அவர் மறந்திருக்கலாம் 



ஆனால் இன்றைக்கு அதிமுக பெயரை சொல்லமால் தவிர்க்கிறார். காரணம் அதிமுகவை பார்த்து பயம் தான் காரணம்


புலி படத்திற்கான ரூ. 1 கோடி 50 லட்சத்தை தம்பி விஜய் செலுத்தி இருக்கலாம்



சர்க்கார் படத்தில் ஒரு வாக்கு போடமுடியமால் அரசியல் கட்சி தொடங்கியது போல நினைக்கிறார். 


இன்றைக்கு திமுகவை தீய சக்தி அரசியல் எதிரி என்று கூறும் விஜய் 

கடந்த தேர்தலின் போது, த என்ன கலர் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்பது உங்களுக்கு தெரியும். அன்றைக்கு திமுக அரசியல் எதிரி என்று தெரியவில்லையா. நேரத்திற்கு நேரம் அரசியலில் கொள்கை மாற்றுபவர்கள் வெற்றி பெற முடியாது




எஸ். ஏ. சந்திரசேகர் என்னுடைய நண்பர் தான். அவருக்கு கள நிலவரம் தெரியும். ஆனால் அவர் சொல்வதை கேட்கும் நிலையில் விஜய் இல்லை


தாய் சொல்லை தட்டாதே.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் விஜய் இருவர் பேச்சை கேட்பதில்லை என்று கூறப்படுகிறது. 



 தெம்பு,  திராணி இருந்திருந்தால்  நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டியது தானே


பேரறிஞர் அண்ணாவை வெற்றி பெற வைத்து திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் எம்ஜிஆர் 


எம்ஜிஆர் போல்  தனது பெயரில்  மூன்றெழுத்து இருக்கிறது என்ங தம்பி விஜய் நினைத்துக் கொண்டார். 



பாவம் பரிதாபம் செங்கோட்டையன்.. நொந்து நொடுல்ஸ் ஆகிவிட்டார்



கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த போது அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறியது மட்டுமின்றி உங்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் நீங்கள் நேரில் சந்திக்காமல் அவர்களை உங்கள் வீட்டிற்கு வரவழைத்து சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது



தமிழக வெற்றிக் கழகத்தின்  மூன்றாமாண்டு தொடக்க விழாவில் விஜய் டான்ஸ் ஆடியது மூலமாக  மீண்டும் டான்ஸ் தான் ஆடுவேன் என்பதை  சொல்லமால் சொல்லியுள்ளார்.



தமிழக வெற்றி கழகத்தினர் களத்திற்கு வருவதற்கு முன்பே நம்முடன் களத்திற்கு வந்துவிட்டனர் இதுதான் கிளைமேக்ஸ்



மீண்டும் நடிக்க வாங்க உங்கள் படத்திற்கு எவ்வித பிரச்சனை இல்லமால் பார்த்துக் கொள்கிறோம். அடுத்த அதிமுக தான் ஆட்சிக்கு வருகிறது  



அதிமுக தற்போது ஆட்சியில் இருந்தால் ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளிவந்திருக்கும்  அரசியல் தம்பி  விஜய்க்கு வேண்டாம் என்றார்.

இன்று நடைபெற்ற விழாவில் 500 தமிழக வெற்றிக் கழக கட்சியினர்   அதிமுகவில் இணைந்தனர், வருகின்ற 28 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதூரில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில், திமுக,மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

வருகின்ற சட்டமன்றத்தேர்தலில்  திமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளரை  படுதோல்வி அடைய செய்வோம், அதற்கான பணிகளை அதிமுகவினர் ஒன்றிணைந்து செய்து வருகிறோம், கடந்த முறை அதிமுகவின்  ஒரு சில முக்கிய நிர்வாகிகள் "உள்ளடி வேலை" பார்த்ததன் காரணமாக அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது, இந்த முறை அதிமுக சார்பில் அடிப்படைத் தொண்டனை வேட்பாளராக நிறுத்தினாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம், மீண்டும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை அதிமுகவின் எஃகுக்கோட்டையாக மாற்றுவோம் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன்,மோகன் என்.கே.பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன்,மகேஷ்,பால்ராஜ்,தனஞ்ஜெயன்,தனபதி,போடுசாமி நகர செயலாளர் மாரிமுத்து மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு மோகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,சுரேஷ், கார்த்திக்ராம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்யா,மகளிர் அணி சாந்தி,சிறுபான்மை பிரிவு சதீஷ்,அதிமுக நிர்வாகிகள் வரதராஜபெருமாள்,முனியசாமி,வேல்முருகன்,கண்ணன்,சண்முகசாமி,ஆசைத்தம்பி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.