விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவில்பட்டி சுகாதாரம் மாவட்டம், புதூர் ,நாகலாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக ரத்ததான முகாம் வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்த ரத்ததான முகாமில் கோவில்பட்டி மருத்துவமனையின் ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் துளசி அவர்கள் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டு சுமார் 26 குருதிக்கொடையாளர்களிடமிருந்து குருதிக்கொடை பெறப்பட்டது.
இந்த நிகழ்வில் சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர்ராஜ், ராஜா, சீதாராமன், ஹரி பிரசாத்,ராமர் பாண்டியராஜன், வட்டார அளவிலான கிராம சுகாதார செவிலியர்கள் இடைநிலை செவிலியர்கள் தன்னார்வ மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.