எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீரை அகற்றக்கோரி பாஜகவினர் நூதன போராட்டம்! 


தற்போது இரண்டு நாட்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக எட்டையாபுரம் அரசு மருத்துவமனை முன்பு தேங்கியுள்ள மழை நீரால்  பொதுமக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்,

தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும், மழைநீர் செல்லும் வகையில் வழிவகை செய்ய வலியுறுத்தி, எட்டையாபுரம் பாரதிய ஜனதா கட்சியினர் கோஷங்கள் எழுப்பி மருத்துவமனை முன்பு தேங்கியுள்ள மழை நீரை வாளியை கொண்டு அகற்றும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமை தாங்கினார் ஒன்றிய தலைவர் சரவணன்,ஒன்றிய செயலாளர் ஹரிஹர சுதன்,இலக்கிய அணி பொறுப்பாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.