புதூரில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!



தூத்துக்குடி வடக்கு மாவட்டம் புதூர் மண்டல் சார்பில் புதூர் பேருந்து நிலையம் முன்பு, 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்டல் தலைவர் கிருஷ்ணன் உட்பட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில், மத்திய பாஜக அரசு திட்டங்களில் தமிழகத்தில் நடைபெற்ற பணிகள், தற்போது நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், பாஜக அரசின் சாதனைகளை பற்றி கட்சி நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.