பாரதியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு எட்டயாபுரத்தில் உள்ள எட்டப்பன் மகாராஜா அரண்மனை வளாகத்தில் பாரதியார் சிலை திறப்பு!
பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதி விழா 2025 நடைபெற்றது இதில் எட்டயபுரத்தில் உள்ள பாரதி இல்லம் முன்பு பாரதியின் ஜதி பல்லக்கில் பாரதியின் சிலை தூக்கிவரப்பட்டு எட்டப்ப மகாராஜா அரண்மனை வளாகத்தை கொண்டு வந்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
ஜதி பல்லக்கு முன்பு மாணவிகளின் நாட்டியம், பரதநாட்டியம், நடைபெற்றது மேலும் ஒயிலாட்டம் நடைபெற்றது.
பின்னர் வளாகத்தில் பாரதியாரின் சிலை திறக்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எட்டயாபுரம் அரண்மனை சமஸ்தானத்தின் 42 பட்டத்து இளவரசர்சந்திர சைத்தன்யா,நல்லி குப்புசாமி , சொற்பொழிவாளர் சுகிசிவம், விஜிபி சந்தோசம்,முன்னாள் டிஜிபி நடராஜன் உள்ளிட்ட மற்றும் ஏராளமான பாரதி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை வானவில் பண்பாட்டு மையம் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.