விளாத்திகுளத்தில் மரங்கள் வளர்ப்பு தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் விழா:வேப்பமரம் பயிர் இடுதல் அதன் பயன்கள் குறித்தும் ஆலோசனை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் வைத்து மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக வேப்பமரம் பயிர் இடுதல் அதன் பயன்கள் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் மற்றும் மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரி ராமமூர்த்தி விவசாயிகள், தன்னார்வலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோருக்கு வேப்பமரம் பயிரிடுதல் குறித்து ஆலோசனை வழங்கினார்..மேலும் மரங்கள் அதிகமாக நடக்கூடிய கிராம ஊராட்சிகள், பள்ளிகள் ,கல்லூரிகள், தன்னார்வலர்களுக்கு விருது, நினைவு பரிசு மற்றும் ஊக்க தொகை வழங்கி சிறப்பித்தனர்.. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசுகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து விளாத்திகுளம் தொகுதியில் 1 கோடி மரங்களை நட்டு வைத்தாள் இன்னும் 10 ஆண்டு காலத்தில் உலகத்தில் அசைக்க முடியாத தொகுதியாக விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இருக்கும் ..நான் இப்பொழுது சிறப்பாக பணி செய்கின்றன என்ற எண்ணம் எனக்கு இல்லைசட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறேன்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்...