விளாத்திகுளம் அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து பின்புறம் கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் காயம்.
திருச்சி டால்மியாபுரம் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன்,அவரது மனைவி சுமதி, இவர்களது உறவினர்கள் அன்புச்செல்வி, சிவகாமி(9)வயது சிறுவன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளனர் காரை திருச்சி கல்லக்குடி பகுதியைச் சேர்ந்த தனபாக்கியம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். கார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை பகுதியில் சென்றபோது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளாதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கி, காரில் பயணம் செய்த சுமதி, அன்புச்செல்வி,சிவகாமி(9)வயது சிறுவன் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் பட்டவர்களை மீட்டு எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து,மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.