எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் 15 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 3-50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார், அதற்கு முன்னதாக படர்ந்தபுளி கிராமத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணியினையும் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மருத்துவ அலுவலர் சுந்தரவடிவேல்ராஜா, மருத்துவர் வெங்கடேசன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரனாராயணன்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உட்பட மருத்துவத் துறை ஊழியர்கள்,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.