2-ம் இராமேஸ்வரம் என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிக்குளம் கடற்கரையில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு விளாத்திகுளம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.
அமாவாசையை பொருத்தமட்டில் ஓர் ஆண்டில், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தாகக் கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு மிகவும் உகந்த தினமான பார்க்கப்படுகிறது. இந்த 3 மாதங்களில் வருகின்ற அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால், இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் எனவும், குடும்பம் செழிக்கும் எனவும் ஐதீகம் உண்டு. இதற்காக ஆண்டுதோறும் இந்நாட்களில் பலரும் தங்களது பகுதிகளில் உள்ள கடல், ஆறு மற்றும் படித்துறைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிக்குளம் கடற்கரையில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசைத் தினத்தன்று, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதே போன்று இந்தாண்டு ஆடி மாத அமாவாசையை 2-ம் இராமேஸ்வரம் என்றழைக்கப்படும் இந்த சிறப்பு வாய்ந்த சிப்பிக்குளம் கடற்கரையில் அதிகாலை 5.00 மணி முதலே விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து எள், பூ, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பூஜை நடத்தி, வழிபட்டு பின் பிண்டத்தினை சிப்பிக்குளம் கடலில் கரைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடிச் செல்கின்றனர். இதனையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்கள் அனைவரும் சிப்பிகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வழிபாடு நடத்தி சென்றனர். இதனால் இப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Vilathikulam
ஆடி அமாவாசையை" முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபாடு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற முதியவரை கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு!
அடுத்த
அரசு தொழில்நுட்ப மையத்தை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026