ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் துவக்கி வைத்தார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி 14 வது வார்டு காமராஜர் நகர் 2வது தெரு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநில சிறப்பு நிதியின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயலாளர்கள் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅயன்ராஜ், பேரூராட்சி மன்றத்துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர் பிரியா, DMK ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, அன்புராஜ், இமானுவேல் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.