அச்சமின்றி வாக்களிக்க விளாத்திகுளத்தில் துணை ராணுவத்துடன் இணைந்து காவல்துறையின் துப்பாக்கி ஏந்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!


வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,தமிழக மக்கள் அரசியல் கட்சியினரின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் ஜனநாயக கடமையை ஆற்ற அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் சார்பில் துணை ராணுவத்துடன் இணைந்து காவல்துறையின் துப்பாக்கி ஏந்திய விழிப்புணர்வு பேரணி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமையில், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல் உட்பட 5 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 50 காவலர்கள்,50 துணை ராணுவத்தினர் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு பேரணி விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரத்திலிருந்து தொடங்கி எட்டையாபுரம்சாலை, விளாத்திகுளம் பேருந்து நிலையம்,மதுரைரோடு, கிழக்குரதவீதி வழியாக சென்று விளாத்திகுளம் காவல் நிலையத்தில் முடிவடைந்தது.