விளாத்திகுளம் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினருக்கு கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு ஆலோசனை கூட்டம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளசாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த கள்ளசாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, கள்ளச்சாராயம் மற்றும் போதை ஒழிப்பு குறித்து தமிழக அரசு சார்பில்,காவல்துறை மற்றும் வருவாய்த்துறை தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மாரத்தான் போட்டி, மக்கள் கூடும் இடங்களில் துண்டு பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினருக்கு கள்ளச்சாராயம் பற்றிய தகவல்கள், ஒழிப்பு மற்றும் போதை பொருள்கள் பற்றி தாங்கள் வேலை பார்க்கும் கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு பற்றி வாரம் வாரம் அறிக்கை தயார் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்பு இதுபோன்ற தகவல்களை காவல்துறையினருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மது மற்றும் போதை தொடர்பான தகவல்களுக்கு மாநில அளவில் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 10581, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் WhatsApp எண்(8300014567. 9514144100.)என்ற எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்,
இந்த எண்களை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் விளம்பரப் பலகைகள் ஆக வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய்த் துறையினர் மற்றும் கிராம உதவியாளர்கள் என 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.