விளாத்திகுளம் அருகே பழுதாகி நின்று கொண்டு இருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல் - ஒருவர் படுகாயம்நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்.லாரி டிரைவரான இவர் இன்று தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ‌ லாரியில் உப்பு லோடு ஏற்றி சென்றுள்ளார்.‌ தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாப்பாத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அருகே சென்று போது லாரி திடீரென பழுதாகி உள்ளது. இதையடுத்து நடராஜ் சாலையில் லாரியை நிறுத்தியுள்ளார்.‌இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கரி  ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற லாரி, பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கரிலோடு ஏற்றி சென்ற லாரி டிரைவர் தூத்துக்குடி முள்ளக்காட்டினை சேர்ந்த செல்லமுத்து ராஜ் படுகாயமடைந்தார். இது குறித்து தகவல் கிடைத்தது மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று காயமடைந்து செல்வ முத்துராஜை மீட்டுஎட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.