விளாத்திகுளம் அருகே ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் பேரூராட்சி,2-வது வார்டு,ராஜாஜி தெருவில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் தமார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.