விளாத்திகுளம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கண்ணீர் மல்க விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரிடம் நன்றி தெரிவித்த மூதாட்டி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்கண்டேயன் கலந்து கொண்டு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்கள்.மேலும் முகாமில் ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த .மங்கையர்க்கரசி என்ற மூதாட்டி தான் புதிதாக வீடு கட்டுவதற்கு மின் இணைப்பு வாங்கியுள்ளார் பின்னர் கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் மேற்கண்ட வீட்டிற்கு அருகில் மின் கம்பிகள் பாதுகாப்பற்ற நிலையில் சென்றதால் அந்த மின் கம்பிகளை மாற்றுவதற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.மேலும் வீட்டின் அருகே பாதுகாப்பற்ற நிலையில் மின் வயர்கள் செல்வதால் மின்விநியோகம் வழங்குவது தாமதமாக்கப்பட்டு வருகிறது என்று சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் துறை சார்ந்த அதிகாரியை அழைத்து மின் வயரை மாற்றி அமைப்பதற்கான ரூ.13,000- தொகையை சம்பவ இடத்திலேயே தனது சொந்த நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் வழங்கியதால் அம்மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.,அதனைத் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு மருந்து பெட்டகம், முதியோர் உதவித்தொகை ஆணை,மின்வாரிய பெயர் ஆகியவற்றை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், ஆற்றங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், மாவட்ட பிரதிநிதி முனியசாமி, மக்கள் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.