விளாத்திகுளம் அருகே வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி RC தெரு பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் முனியசாமி (65), இவர் தனது குடும்பத்தினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டி கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் சாமி கும்பிடுபவர்கள், அக்கோவில் திருவிழாவை முன்னிட்டு செவல்பட்டி கிராமத்தில் இருந்து முளைப்பாறியை எடுத்துக்கொண்டு வேம்பார் கடற்கரைக்கு சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விளாத்திகுளம் அருகே உள்ள ராயப்பன் செவல் கிராமத்திற்கு அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முனியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் வாகனத்தில் பயணித்த செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் ரவி(49), வில்வமரத்து பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெயராஜ் (42), கருப்பையா மகன் செல்வராஜ்(65), நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த வலிநாதன் என்பவரின் மகன் வர்ஷன் (10), செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் ராஜாமணி (67), மடத்தா குளம் கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் என்போரின் மகன் ஜான்சன் (17), சின்னத்துரை மகன் ரவி (49) ஆகிய 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டவர்கள் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.